கிருஷ்ணகிரியில் இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் செல்வகுமார், பர்கூர் தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.