கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலைய எல்லைகளில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.