கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த தினேஷ் (25) என்பவர், 2022-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று, நீதிபதி சுதா, குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.