சூளகிரி அருகே சேவல் சண்டை நடத்திய 8 பேர் கைது

80பார்த்தது
சூளகிரி அருகே சேவல் சண்டை நடத்திய 8 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பு ஒன்றில் சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று சேவல் சண்டை போட்டிகள் நடத்தியதாக சூளகிரி பிரவீன்குமார் (36) நரேஷ் (44) கோடீஸ்வரன் (34) திருமுருகன் (44) கஜேந்திரமூர்த்தி (34) தமிழரசன் (38) அசோக்குமார் (44) மேலுமலை சின்னப்ப கவுண்டர் (55) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1,600 ரூபாய் மற்றும் 2 கார்கள், 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி