காவேரிபட்டணம் அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

709பார்த்தது
காவேரிபட்டணம் அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே இடைபையூரைச் சேர்ந்த விவசாயி விஜயகுமாரின் 5 வயது மகன் கமல் கிஷோர், நேற்று முன்தினம் கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி