கிருஷ்ணகிரி அருகே தொட்டபூவத்தி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி வேலு, ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அட்டகுறுக்கி பேருந்து நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சூளகிரி அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.