கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு மோட்டூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சூர்யா, கடந்த ஒரு வருடமாக தலைவலி பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்தும் குணம் அடையாததால், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.