கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பூதனூர் கிராமத்தைச் சேர்ந்த 90 வயதான கோவிந்தம்மாள், கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். நேற்று அவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது, வீட்டிற்குள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். கிராம மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பீரோ, சமையல் சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.