கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து, பின்னர் மாலை விடுவித்தனர்.