கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) A. முனிராஜ், பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் கல்வித் துறையில் முக்கிய அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றியமைத்துள்ளன.