கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி ஊராட்சி போத்தாபுரம் கிராமத்தில் ரூ. 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் ஹவுசிங்போர்டு முதல் ஜெகதாப் வரை தார்சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது. பர்கூர் எம்.எல்.ஏ. டி. மதியழகன் கலந்துகொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.