செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் சிறுவன்.

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், 17 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், காதலித்த சிறுமிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலால் மனமுடைந்து, சுமார் 200 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி