கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் 40-ம் ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மூலவர் லட்சுமிநரசிம்ம சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 28-ஆம் தேதி காலை லட்சுமி நரசிம்மர் திருக்கல்யாணம், மாங்கல்யதாரணம், தொடர்ந்து இரவு கருட வாகன உற்சவம், மறுநாள் யானை வாகன உற்சவம் நடக்கிறது. இதை தொடர்ந்து ஜூன் 5-ஆம் தேதி வரை பல்வேறு ரத உற்சவங்கள் நடைபெற உள்ளன.