கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே வள்ளுவர் புரம் பகுதியில் சீதா மற்றும் அனிதா இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 21-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் லட்சுமணன், அனிதா, ஸ்ரீராம், சீதா, சிவலிங்கம், வேணுகோபால், பெருமாள், சென்னையன் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.