கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் அங்காளம்மன்-பூங்காவனத்தம்மன் தேர் திருவிழாவில் 6 பேரை தாக்கிய வழக்கில், ஆகாஷ் (28) மற்றும் சாண்டி @ சந்தோஷ் (25) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.