நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்வழங்கும்நிகழ்ச்சி

261பார்த்தது
நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்வழங்கும்நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 163 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 328 பேர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜ முருகன் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 4 மற்றும் 5 ஆம் கட்ட நீச்சல் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பள்ளி மாணவர்கள் இதில் கலந்து பயனடையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி