கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகில், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறவுள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) தனஞ்செயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.