கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், ஓசூர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஓசூர் சார் ஆட்சியர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர். தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசித்தார்.