கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அன்னை சோனியா காந்தியால் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டப் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.