கிருஷ்ணகிரி: முதல்வர் வருவதை ஒட்டி ஆலோசனை கூட்டம்

57பார்த்தது
கிருஷ்ணகிரி: முதல்வர் வருவதை ஒட்டி ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் - 2025, 3-வது வாரத்தில் வருகைபுரிவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் தே. மதியழகன் ஒய். பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப., ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகாரே மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி