கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் அருகேயுள்ள மாணிக்கனூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (28) என்ற கூரியர் நிறுவன ஊழியர், கடந்த 3-ஆம் தேதி மாலை பர்கூர்-கிருஷ்ணகிரி சாலை பனந்தோப்பு அருகே டூவீலரில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.