கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் மருத்துவர்
பிரபு கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்து, புகையிலை மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் பங்கேற்று, பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.