கிருஷ்ணகிரி: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

682பார்த்தது
கிருஷ்ணகிரி: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று மாதாந்திர உதவித்தொகையை அண்டை மாநிலங்களைப் போல ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெரிசாமி தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 165 மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி