கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தேமுதிக இடையே ஏற்பட்ட கூட்டணி குறித்து தேமுதிக கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத் தலைவர் சின்ராஜ் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தில் தேமுதிக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.