கிருஷ்ணகிரி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

8பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி அருகே ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ்கூடல் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை சுதாராணி தலைமையில் நடந்த இவ்விழாவில், காவடி ஆட்டம், கவிதை வாசித்தல், பாரம்பரிய நடனங்கள், கவியரங்கம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி