கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் எதிரே இன்று கல்வித்துறை சார்பில் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழியில் இவ்வுலகில் வாழும் குடிமக்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக திகழும் சுற்றுச் சூழலின் முக்கியத்தை உணர்ந்து, உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிர்களுடன் இணைந்து உயிர் வாழ பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கப் பாடுபடுவேன் என்றும், உறுதிமொழி எடுக்கப்பட்டது.