கிருஷ்ணகிரி: முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

79பார்த்தது
கிருஷ்ணகிரி: முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்களின் நலனுக்காக காலாண்டிற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவ குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் தொடர்பாக விவரங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற உள்ளது. எனவே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை மனுக்களாக கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி