கிருஷ்ணகிரி அருகே போலி மருத்துவருக்கு காப்பு.

4பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே போலி மருத்துவருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே எம். ஜி. ஆர். நகர் பகுதியை சேர்ந்த தவமணி (56) என்பவர், தனது வீட்டின் முன்பு கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பொதுமக்களின் புகாரின் பேரில், நவம்பர் 20 அன்று போச்சம்பள்ளி அரசு முதன்மை மருத்துவ அலுவலர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். தவமணி முறையாக படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தவமணியை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி