கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியைச் சேர்ந்த சேகர் (57) என்ற விவசாயி, கடந்த 15-ஆம் தேதி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.