கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு 150-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன. அதில் 100-க்கும் மேற்பட்ட யானைகளை கர்நாடகாவிற்கு விரட்டப்பட்டது.
இந்த நிலையில் 20 யானைகள் மட்டும் ஜவளகிரி காப்புக்காட்டில் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதனால் அவற்றை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.