கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 50,000 கடன் தள்ளுபடி மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு ரூ. 5,000 தள்ளுபடி அறிவித்ததை அரசு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மகாராஷ்டிராவில்
பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றி வருவதாக கோஷங்கள் எழுப்பினர்.