தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.யீ. பிரகாஷ், மற்றும் ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு மௌனஞ்சலி செலுத்தினர்.