கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 7,76,318, பெண் வாக்காளர்கள் 7,77,458 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 264 என மொத்தம் 15,54,040 வாக்காளர்கள் உள்ளனர். ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாரியான வாக்காளர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திருத்தப் பணியின் போது, இளம் வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் தகுதியற்ற பெயர்களை நீக்குதல் போன்ற பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.