கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து துறையினர் நேற்று பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பியதாக இரண்டு அரசுப் பேருந்துகள் மற்றும் எட்டு தனியார் பேருந்துகளில் இருந்த ஏர் ஹாரன்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும், பேருந்துகளில் அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.