கிருஷ்ணகிரி: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

81பார்த்தது
கிருஷ்ணகிரி: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரியில், பருவதராஜகுல மீனவர் சமுதாய நல அறக்கட்டளை சார்பில், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் பாராட்டு விழா இந்த ஆண்டும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மீன் வியாபாரிகள் நல சங்கத்தினர் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி