கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே தளிஅள்ளி பகுதியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி எம். எல். ஏ பேசுகையில், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி என நடிகர் விஜய் பேசி வருவதை மறைமுகமாக தாக்கி பேசினார். "விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும்" என அதிமுக தலைவர்கள் அழைப்பு விடுக்கும் சூழலில், கே. பி. முனுசாமியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.