குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்த முன்னாள் அமைச்சர்.

6பார்த்தது
குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்த முன்னாள் அமைச்சர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகர மகப்பேறு அரசு தலைமை மருத்துவமனையில், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதா நவாப் ஏற்பாட்டில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று பிறந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் கழக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி கலந்துகொண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்து வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி