மணல் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல்.

1பார்த்தது
மணல் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க கனிம வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஓசூர் ஜூஜூவாடி, நஞ்சாபுரம், பேரிகை சாலை சூடாபுரம் பகுதிகளில் வாகன தணிக்கையின் போது, மணல் கடத்திச் சென்ற நான்கு லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஓசூர் சிப்காட், மத்திகிரி, பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி