கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும், தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக ஊதிய விகிதங்களில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.