கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்திய திராட்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் நேற்று துவக்கி வைத்தார். இந்த பயிற்சியில் 11 வகையான திராட்சை ரகங்கள் செடி வளர்ப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திரா, முதல்வர் முனைவர். எம். எஸ். அனிசா ராணி, ஏபிடா பிராந்திய மேலாளர் ஷோபனா குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.