கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை பணியாளர் போராட்டம்; உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரிக்கை

389பார்த்தது
கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை பணியாளர் போராட்டம்; உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரிக்கை
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சாலைப்பணியாளர் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்றக்கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பணியாளர்களை கைது செய்து துன்புறுத்தியதாக தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

கோட்டத்தலைவர் திம்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி