காவேரிப்பட்டணம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூங்காவனம் (38) என்பவரிடம், கருக்கன்சாவடி தொழிலாளி பிரபு நகைகளை வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக கடந்த 24-ஆம் தேதி பிரபுவிடம் பூங்காவனம் கேட்டபோது, பிரபுவும் அவரது மனைவி அனிதாவும் சேர்ந்து பூங்காவனத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பூங்காவனம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின் பேரில் பிரபு மற்றும் அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.