கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. இவரது வீட்டிற்கு செல்லும் நடை பாதையை அங்கிருந்தவர்கள் அடைத்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்
சிவாஜி அவருடைய மனைவி மாது ஆகியோர் நேற்று போச்சம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தின் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.