கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.