கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் கடந்த 16-ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் காவேரிப்பட்டினம் அருகிலுள்ள குண்டலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.