கிருஷ்ணகிரி கத்திகானப்பள்ளி புதிய வீட்டு வசதிவாரிய குடியி ருப்பில் வசித்து வருபவர் முருகன் மகன் அரவிந்தன் (32), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் செப்-1ம் தேதி அன்று வெளியே சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதை அடுத்து அரவிந் தனை பல இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அரவிந்தனை தேடி வருகின்றனர்.