கிருஷ்ணகிரி அருகே கதிரிபுரம் வரட்டம்பட்டி பூ நகர் பகுதியை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (68), கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலையில் நடந்து சென்றபோது டூவீலர் மோதி படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கே. ஆர். பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.