கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் முத்தமிழ், கவின் கலை, நுண்கலை மற்றும் மாணவர் பேரவை நிறைவு ஆகிய ஐம்பெரும் விழா கல்லூரி முதல்வர் அனுராதா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி பங்கேற்று, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். மேலும், அவர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.