கிருஷ்ணகிரி அணையில் நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 484 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த உயரத்தில் 50.05 அடி நீர் உள்ளது. வினாடிக்கு 183 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட சாத்தனூர் அணைக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.