கிருஷ்ணகிரி: டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

777பார்த்தது
கிருஷ்ணகிரி: டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சுகாதாரம் இல்லாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அரசு அனுமதிக்காத செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட 2 கிலோ தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், உரிமம் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.